
அரசாங்க உர மானியத்தின் கீழ் பெறப்பட்ட யூரியா உரத்தில் புழுக்கள் இருப்பதாக மகாவலி பி பிராந்தியத்தின் திம்புலாகல மனம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இதன்படி, மணம்பிட்டி விவசாய சேவை நிலைய அதிகாரிகளும் வந்து பார்வையிட்டதுடன், உர மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக விவசாய திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)