ரடெல்ல வளைவில்/குறுக்குவழியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (22) டிக் ஓயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இடம்பெற்றது.
விபத்தின் போது வேனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பயணித்துள்ளனர். காயங்களுக்கு உள்ளான ஏனைய உறவினர்கள் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரங்கல் தெரிவிக்கும் வகையில் டிக் ஓயா நகரில் உள்ள அனைத்து கடைகளும் சனிக்கிழமை (22) மூடப்பட்டு வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது.
இதேவேளை, வேனின் சாரதியின் சடலம் ஹட்டன் குடாஓயாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (23) மேற்கொள்ளப்படவுள்ளன. (யாழ் நியூஸ்)