பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி சிறுநீரக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோசடியில் பிரதான தரகராக செயற்பட்ட கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுநீரக கடத்தல்காரர்களுக்கு உதவியதாக கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம சேவை பிரிவுகளின் இரு கிராம உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)