அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் இல்லாத நாடாக இலங்கை மாறலாம் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னைய வரிக் கொள்கையுடன் தாம் இணங்கினாலும் புதிய வரிக் கொள்கையின் ஊடாக தொழில் வல்லுநர்களினால் இவ்வளவு பெரிய வரியை சுமக்க முடியாது எனவும், இந்த வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்க அதிகமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நியாயமற்ற வரிக் கொள்கையை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றும், அதற்கான போராட்டம் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.