ஹபரணையில் காட்டு யானை ஒன்று இன்று (13) அதிகாலை புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இரண்டு காட்டு யானைகளும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
ஓடும் ரயிலில் யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளதுடன், மற்ற இரு யானைகளும் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஹபரணை - கல் ஓயா ரயில் பாதையில் ஹபரணை ஹதரஸ்கொடுவ பகுதியில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லப்பட்ட யானைக்கு 20 வயது இருக்கும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலின் பின் இயந்திரத்தில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ( யாழ் நியூஸ்)