நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான் மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அதன்படி, பவித்ரா வன்னியாரச்சி, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் தோட்ட அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.