
"இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் விதிக்கப்பட்டால், பொது மற்றும் மின்சார நுகர்வோர்கள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அதம்ன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளுக்கான எந்தவொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று PUCSL நேற்று இலங்கை மின்சார சபைக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தது.
நேற்றும் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ( யாழ் நியூஸ்)
