இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்து வர்த்தகத்திற்கு ஊக்கமளித்த அரேபியர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்து வர்த்தகத்திற்கு ஊக்கமளித்த அரேபியர்கள்!


இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்து வர்த்தகத்திற்கு அரேபியர்கள் மற்றும் தமிழர்கள் எவ்வாறு பொலிவைக் கொண்டு வந்தனர் என்பது தொடர்பில் சவூதி ஆரேபியாவில் இருந்து வெளியாகும் அரப் நியூஸ் விபரங்களை வெளியிட்டுள்ளது.


1909 ஆம் ஆண்டு வெளியான இலங்கையின் கடற்றொழிலாளர்கள் முத்துக்களை பொலிவுப்படுத்தும் ஜேர்மன் பிரசுரத்தின் காப்பக விளக்கப்படத்துடன் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


முதல் அரேபியர்கள் கி.மு 03 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்தனர்.


அவர்கள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.


மொரொக்கோ நாட்டவரான இபின் பதூதா இலங்கையின் வட இலங்கைக்கு வந்தபோது, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சியாளர், அவர், தமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத முத்துக்களை கொடுத்து அவரை வரவேற்றதாக வரலாறு கூறுகிறது.


புகழ்பெற்ற மொரோக்கோ ஆய்வாளர் இபின் பதூதா பயணித்த கப்பல் 1344 செப்டம்பரில் புத்தளத்தை வந்தடைந்தது.


அவர் சில நாட்கள் தீவில் தங்கினார், மேலும் முஸ்லீம் யாத்ரீகர்களால் வணங்கப்படும் அடம்ஸ் மலையை  பார்வையிட்டார் என்றும் வரலாறு கூறுவதாக அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.


இபின் பதூதா யாழ்ப்பாண மன்னரின் திறைசேரிக்கு முக்கிய வருவாய் ஈட்டிக்கொடுப்பவர்களில் ஒருவராக விளங்கினார் என்றும் அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.


அவர் தனது நினைவுக் குறிப்பில், தமக்கு  வழங்கப்பட்ட கற்கள் "அற்புதமான முத்துக்கள், உலகின் மிகப்பெரிய மற்றும் அழகான முத்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இபின் பதூதாவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே அரேபியர்கள் இலங்கைக்கு வந்து, முத்து உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்தனர் என்று இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அபிவிருத்தி அதிகாரி அப்துல் ரஹீம் ஜெஸ்மில்லை கோடிட்டு அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


அந்த நேரத்தில், இலங்கையின் வர்த்தகம் முற்றிலும் அரேபிய தீபகற்பம் மற்றும் மொசபத்தேமியாவின் சில பகுதிகளிலிருந்து வந்த அரேபியர்களின் கைகளில் இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.


அவர்கள் ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் வெள்ளை மிளகு போன்ற மசாலாப் பொருட்களைத் தேடி வந்தனர் என்று ஜெஸ்மில் கூறியுள்ளார்.


அவர்கள் இங்கு தங்கியிருந்தபோது, நாட்டின் சில கடல் பகுதிகள் முத்துகளால் நிரம்பியிருப்பதைக் கண்டறிந்தனர்.


முத்துக்குளித்தல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது மற்றும் அரேபிய வளைகுடாவின் பல சமூகங்களில் பண்டைய காலங்களில் செல்வத்தின் முக்கிய ஆதாரமாக இருந்தது.


இந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், முத்து விடும் பருவத்தில் கடலில் மாதக்கணக்கில் பயணிப்பார்கள். அதே சமயம் அவர்களின் குடும்பங்கள் கரையில் அவர்களுக்காகக் காத்திருந்து அவர்களின் பாதுகாப்பிற்காக சடங்குகளைச் செய்தனர்.


அரேபிய வணிகர்கள் இலங்கையை அடைந்ததும்,  உடனடியாக அதன் முத்து படுக்கைகளின் செல்வத்தைப் புரிந்துகொண்டு தீவின் வடமேற்கு கடற்கரையை ஆராய்ந்தனர்.


மன்னார், சிலாபம் மற்றும் கல்பிட்டி நகரங்களுக்கு அப்பால் மன்னார் வளைகுடாவில் உள்ள சிப்பிகளில் ஆரம்பத்தில் முத்துக்கள் காணப்பட்டன.


பேருவளையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான புதிய இடங்களையும் அராபியர்கள் கண்டுபிடித்தனர்.


இந்தத் தொழில் மிகவும் இலாபகரமானது, இதனையடுத்து அரேபிய முத்து வியாபாரிகள் பலர் இலங்கையில் குடியேறி பெரும்பாலும் தங்கள் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பெண்களை மணந்தனர்.


இலங்கையில் முதல் பள்ளிவாசல் இந்த அரேபியர்களால் கட்டப்பட்டது.


அல்-அப்ரார் பள்ளிவாசல் அரேபிய கலாசாரத்தின் நினைவுச் சின்னமாக உள்ளது என்று ஜெஸ்மில் கூறியுள்ளார்.


இது கி.பி 920 இல் கட்டப்பட்ட பேருவளையில் உள்ள ஒரு பள்ளிவாசலைப் பற்றி குறிப்பிடுகிறது. இலங்கையின் முதல் பள்ளிவாசலாக இது கருதப்படுகிறது.


ஐரோப்பியர்களின் பிற்கால கையெழுத்துப் பிரதிகள், 19 ஆம் நூற்றாண்டு வரை கடலில் இருந்து முத்து ஓடுகளை சேகரிப்பது, அவற்றை பதப்படுத்துவது மற்றும் வர்த்தகம், அரேபியர்கள் மற்றும் தமிழர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தமையை சான்றுப்படுத்தியுள்ளது.


அவர்கள் சிறந்த சுழியோடிகளாகவும் கருதப்பட்டனர்.


ஒரு நூற்றாண்டு காலமாக, முத்து  வளர்ப்பு போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர்கள் மன்னாரில் உள்ள கரையோர சமூகங்களுடன் இந்த தொழிலில் ஈடுபட்டனர்.


அந்த நேரத்தில், இந்தத் தொழிலில் சுமார் 50,000 பேர் பணியாற்றியதாக கூறப்படுகிறது.


17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒல்லாந்தர்கள், போர்த்துக்கேயர்களை வெளியேற்றியபோது, அவர்கள் அதை 200,000 ஊழியர்களாக விரிவுபடுத்தினர்.


இந்நிலையில் மற்றொரு காலனித்துவ சக்தியான பிரித்தானியாவின் கீழ், ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, முத்துக்குளித்தல் ஆரம்பமானதாக அரப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.


எனினும் தொழில்துறையை புதுப்பிப்பதில் ஆங்கிலேயர்கள் தொடர்ச்சியான தோல்வியுற்ற சோதனைகளை மேற்கொண்ட பிறகு, 1920 களில் ஜப்பானியர்களால் வளர்க்கப்பட்ட முத்தை அறிமுகப்படுத்தினர்.


இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரும் சில முத்து வேட்டைகள் தொடர்ந்தன, ஆனால் இன்று அது கிட்டத்தட்ட அழிந்து விட்டது.


இலங்கை இன்னும் நன்கு அறியப்பட்ட நகை உற்பத்தியாளராக இருக்கும் அதேவேளையில், ஒரு காலத்தில் அதன் புகழைப் பெற்ற இரத்தினக் கற்களுக்கான அவதானிப்பு இப்போது இல்லை.


இந்நிலையில், கொழும்பில் நடைபெறும் வருடாந்த இலங்கை சர்வதேச இரத்தினக்கல் மற்றும் நகை வர்த்தக கண்காட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிசான் நசீர், உள்ளூர் கைவினைஞர்களால் பயன்படுத்தப்படும் முத்துக்கள், பூர்வீக முத்துக்கள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் முத்துக்குளித்தல் இன்று ஒரு அழிந்து வரும் தொழில், அத்துடன் இரத்தினக் கற்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. 


பதிலாக ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து நாங்கள் முத்துகளைப் பெறுகிறோம் என்றும் ரிசான் நசீர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.