புதிய முட்டை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் ரூ. 100,000 முதல் ரூ. 500,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்துள்ளார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 44 ஆகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 46 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)