முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் காவல்துறை விசேட விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால், கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று (13) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த, ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது.