
கேம்பிரிட்ஜ் O/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு வசதியாக ஏற்பாடுகளை செய்ய முடியாது என பாடசாலை அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பாடசாலை அதிகாரிகள் தங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதற்கான தெளிவான காரணத்தை தமக்கு தெரிவிக்கவில்லை என்றும், அவர்கள் தனியார் விண்ணப்பதாரர்கள் என்றும் எந்தப் பாடசாலையையும் குறிப்பிடாமல் இருப்பதால், அது அவர்களின் குழந்தைகளின் சான்றிதழை பாதிக்கும் என்றும் அவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர். (யாழ் நியூஸ்)