
ஒரு நாளைக்கு 100 கிமீ தூரத்திற்குள் பள்ளிக் கல்விச் சுற்றுப்பயணங்களை அனுமதிக்கும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அமைச்சக அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை சுற்றுலாப் பயணங்களை அதிகபட்சமாக 100 கிமீ தூரம் வரையிலும், சுற்றுலா நாட்களில் மாலை 6.30 மணிக்கு முன்னதாக பாடசாலைகளுக்கு திரும்பவும் சுற்றறிக்கையை வெளியிட கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளது.
அண்மையில் நானுஓயாவில் வேன், முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை உல்லாசப் பேருந்தில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அமைச்சு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கொழும்பில் உள்ள தனியார் சிறுவர் பாடசாலையொன்றில் இருந்து வந்த பாடசாலை உல்லாசப் பேருந்து இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் வேனில் பயணித்த மூன்று சிறுவர்கள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர். (யாழ் நியூஸ்)