
தனது மகனை காணவில்லை என ஃபகீமின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் வங்கதேசத்தில் இருந்து மலேசியா செல்லும் சரக்கு கப்பலில் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் உள்ளே, பசியால் வாடிக் கொண்டிருந்தான் சிறுவன் ஃபகீம். கடந்த ஜனவரி 11ஆம் தேதி ஃபகீம் காணாமல் போன நிலையில் கப்பல் ஆறு நாட்கள் கழித்து மலேசிய துறைமுகத்தை சென்றடைந்து இருக்கிறது.
தொடர்ந்து கண்டெய்னருக்குள் இருந்து சத்தம் வந்ததால் அதனை திறந்து பார்க்கும் போது உள்ளே சிறுவன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் துறைமுக அதிகாரிகள். ஒருவேளை சிறுவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கோணத்தில் மலேசிய காவல்துறையினர் இது குறித்த சாரணையில் இறங்கினர். ஆனால் நடந்த சம்பவத்தை சிறுவன் மூலமாக அறிந்த காவல்துறையினர் வங்கதேசத்தில் உள்ள அவனது பெற்றோரையும் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசி இருக்கின்றனர்.
இதில் குற்றப் பின்னணி ஏதும் இல்லை எனவும் விளையாடும்போது சிறுவன் தவறுதலாய் கண்டனருக்குள் சிக்கிக் கொண்டது இத்தனை சிரமத்திற்கும் காரணமாக அமைந்துவிட்டதாகவும் மலேசிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து சிறுவனை அவனது பெற்றோருடன் சேர்க்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.