2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் பாடசாலை சீருடைக்கான 70% துணித் தேவைகளை சீன அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாகவும், அது தொடர்பான சீருடைத் துணிகள் கூட்டுறவுத் திணைக்களத்தின் ட்ரக் வண்டிகளைப் பயன்படுத்தி அடுத்த சில நாட்களில் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டின் 03 ஆம் பாடசாலை தவணை மார்ச் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)