ஜோர்டானில் TikTok சமூக ஊடக பயன்பாடு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, போராட்டக்காரர்கள் வன்முறையை பரப்ப டிக்டாக் செயலியை தவறாக பயன்படுத்துவதாக அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து டிப்பர் மற்றும் லொரி சாரதிகள் போராட்டம் நடத்தியதையடுத்து, அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்ட மான் மற்றும் காரக் ஆகிய இடங்களில் இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு ஜோர்டான் மன்னர் இரங்கல் தெரிவித்துள்ளார்.