கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 75 க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த சாட்சியங்கள் மூலம் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில் மேலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரையில், இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஷாஃப்டரின் மனைவி, ஷாஃப்டரின் செயல் அலுவலர், கல்லறைத் தொழிலாளி மற்றும் அலுவலக ஊழியர் உள்ளிட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்
அத்துடன், சிசிடிவி மற்றும் தொலைபேசி பதிவுகளும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், பெறப்பட்ட இரண்டு தேசிய அடையாள அட்டை எண்களின் விவரங்களின் அடிப்படையில் ஷாஃப்டரின் கைப்பேசி தரவு மற்றும் வங்கிக் கணக்குகள் மற்றும் 16 வங்கிக் கணக்குகளை பொலிஸார் தற்போது பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.