10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன.
இதற்கான விசேட வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி சுற்றுலாத் துறைக்கான எரிசக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV கமெராக்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கிகரிக்கப்பட்ட பொருட்கள் என்பனவற்றுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்.