2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் டிசம்பர் 08 முதல் டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தங்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2021 விடைத்தாள்களின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்:
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
அல்லது DOE மொபைல் பயன்பாடு மூலம், அல்லது https://onlineexams.gov.lk/eic எனும் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக விசாரணைகளை பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 785231 / 0112 785216 / 0112 784037 ஊடாக மேற்கொள்ளலாம். (யாழ் நியூஸ்)