திருத்தப்பட்ட முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று (15) நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, புதிய திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (14) தீர்ப்பளித்ததுடன், முட்டைக்கான புதிய விலையை உடனடியாக நிர்ணயம் செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)