இதற்கமைய, கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் எடைக்கொண்ட டின் மீனின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் புதிய விலை 215 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 425 கிராம் எடைக்கொண்ட டின் மீனின் புதிய விலை 495 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.