படப்பிடிப்பின்போது தற்கொலை செய்துகொண்ட இளம் இந்திய நடிகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

படப்பிடிப்பின்போது தற்கொலை செய்துகொண்ட இளம் இந்திய நடிகை!

பாலிவுட் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை துனிஷா ஷர்மா. 20 வயதாகும் இவர், நடிகை கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான Fitoor என்ற படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்த இவர், தனது முழு பணியையும் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதில் செலவிட்டு வந்தார். இந்தி மொழியில் வெளியாகும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தி சீரியல் ஒன்றில் நடித்து வரும் இவர், இன்றும் வழக்கம்போல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அப்போது இடைவெளி விட்டு, தனது அறையில் இருந்துள்ளார். அப்போது நீண்ட நேரமாகியும் இவர் வரவில்லை என்று சீரியல் குழு காத்திருந்த நிலையில், இவரது அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது நடிகை துனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குழுவினர், இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கோராய்வுக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

விசாரணையில் நடிகை துனிஷா தற்கொலை செய்துகொள்ளும் முன்பு, அவரது நண்பர் ஒருவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இதற்கு முன்பே துனிஷா தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறினர். தற்போது தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த துனிஷா ஷர்மா (20), பித்தூர், பார் பார் தேகோ, தாதபங்க் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். அதோடு அதிகமான இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக தமிழில் பிரபலமான 'மூன்று முடிச்சு' சீரியலில் அஞ்சலியாக நடித்த நடிகை வைஷாலி தக்கார் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.