எதிர்வரும் ஆண்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தற்காலிக நிவாரணமாக 1465 வகையான பொருட்கள் இறக்குமதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், ஏற்கனவே 795 வகையான பொருட்கள் கட்டுப்பாடுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளில் உள்ள 670 வகையான பொருட்களில், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
எனவே, உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதை தொடர்வதா அல்லது நிரந்தரமாக கட்டுப்படுத்துவதா, உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிப்பதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)