வரவு செலவு திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட சுகாதார ஊழியர்கள் இன்று (08) 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அடக்குமுறையை நிறுத்துதல், வரி மற்றும் பொருட்களின் விலைகளைக் குறைத்தல், சுகாதார சேவைக்கு 5% ஒதுக்கீடு, சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கு உட்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக மருத்துவமனையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். (யாழ் நியூஸ்)