ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் தகுதிபெற்றுள்ளன. பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று சாதனை படைப்பதில் மும்முரமாக உள்ளது.
மெஸ்ஸி கனவு பற்றி டெம்பலே
இதனால் நாளை மறுநாள் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு வானளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரான்ஸ் அணியின் முக்கிய வீரரான டெம்பலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டெம்பலே கூறுகையில், கால்பந்து ஜாம்பவானான லயோனல் மெஸ்ஸியின் வாழ்க்கையில் உலகக்கோப்பை மட்டுமே இல்லாமல் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
செண்டிமெண்ட்-க்கு இடமில்லை
மெஸ்ஸியின் கனவை பூர்த்தி செய்துகொள்ள தீவிரமாக இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரியும். ஏனென்றால் மெஸ்ஸியுடன் பார்சிலோனா அணியில் 4 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். ஆனால் எங்களுக்கும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் களத்தில் மெஸ்ஸியின் செண்டிமெண்ட் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை. எங்களுக்கு பிரான்ஸ் நாட்டுக்காக கோப்பையை வெல்ல வேண்டும். நிச்சயம் வெல்வோம் என்று தெரிவித்தார்.

நட்சத்திர வீரர்கள்
2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியில் டெம்பலே இடம்பெற்றிருந்தார். ஆனால் பிரான்ஸ் அணியில் ஜாம்பவான் வீரர்கள் இருந்ததால், நாக் அவுட் போட்டிகளில் 2 நிமிடங்கள் மட்டுமே விளையாடினார். இதுகுறித்து டெம்பலே கூறுகையில், 2018ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணியில் காண்டே, போக்பா, ஹெர்னாண்டெஸ் என ஏராளமானோர் இருந்தனர். இப்போது காயம் காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை.

நிச்சயம் வெல்வோம்
கிட்டத்தட்ட 2018ல் விளையாடிய பிரான்ஸ் அணி என்றாலும், இம்முறை வேறு ஒரு சூழலில் இருக்கிறோம். அதிக அமைதியுடனும், ஏராளமான அனுபவத்துடனும் இருக்கிறோம். நாளை மறுநாள் நிச்சயம் அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்வோம் என்று தெரிவித்தார்.