கடுமையான மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (04) பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 11.00 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, வடமேல், தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும், ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.