தொழிலதிபரான திலினி பிரியமாலி தனது உடைகள் கலையப்பட்டதாகவும், சிறையில் தனது அந்தரங்க உறுப்புகள் சோதனை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பிரியமாலி தனது வழக்கறிஞர்கள் மூலம் இலங்கை மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
சிறை அதிகாரிகள் அவரது உடைகளை கலைத்து, அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனையிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கூறினர்.
200 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் பிரியாமாலி கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் திலினி பிரியமாலி சொகுசு அலுவலகம் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)