பல்கலைக்கழகங்களில் சஹ்ரானை போன்று தாடி வளர்க்கும் பிக்குகள் வெளியேற்றப்பட வேண்டும்! -தம்மரதன தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைக்கழகங்களில் சஹ்ரானை போன்று தாடி வளர்க்கும் பிக்குகள் வெளியேற்றப்பட வேண்டும்! -தம்மரதன தேரர்


பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள், சஹரானைப் போல தாடி மற்றும் தலைமுடி வளர்ப்பதாகவும் இவ்வகையான மாணவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் மிஹிந்தல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.


புத்தரின் தர்ம சிந்தனைகளைப் பின்பற்றாமல் தலிபான்கள் லெனின் கோட்பாட்டை பின்பற்றுவதுபோல இவர்கள் பின்பற்றுகின்றனர் என்றார்.


விசேட மற்றும் பொது பட்டம் பெறும் இரு வகையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதாகவும் அவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்  என்றும் சுட்டிக்காட்டினார்.


இதே சட்டத்தை பிக்கு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், சஹரான் என்ற நபர் தாடியுடன் இறந்ததாகவும் அதன் பின்னர் பலர் சஹாரானைப் போல  தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.


பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள் மற்றும் பௌத்த துறவிகள், தலைமுடி மற்றும் தாடியை வளர்க்கத் தொடங்கியுள்ளதாகவும், பௌத்த பாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பயிலும் கலைப் பீட பிக்கு மாணவர்கள் தாலிபான்கள் போன்று செயற்படுகின்றனர் என்றார்.


இந்நிலையில், இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக அனைத்து மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடுவதற்கும் அதுவரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.