முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக செயற்பட்ட சுதேவ ஹெட்டியாராச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர், குடிபோதையில் வாகனம் செலுத்திமைக் காரணமாக ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குடிபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் காவல்துறையின் உத்தரவை மீறிய குற்றத்திற்காக கண்டி பிரதேச காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.