இந்தோனேசியா ஜாவா தீவில் எரிமலை வெடித்ததால் கிராம மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தோனேசியாவில் இன்று (04) எரிமலை வெடித்து 15 கிலோமீட்டர் தொலைவில் சாம்பல் மேகத்தை உமிழ்ந்து, கிட்டத்தட்ட 2,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஜாவா தீவின் கிழக்கில் உள்ள பகுதிக்கு அவர்கள் அவசர எச்சரிக்கையை வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.