இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் 5.8% அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் 1705 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு நவம்பர் மாதத்தில் 1804 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செலாவணி பரிவர்த்தனை முறையின் மூலம் சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 1.4 பில்லியன் டொலர்கள் வரையறுக்கப்பட்ட தொகையையும் உள்ளடக்கியதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.