கொலைகள் மற்றும் சதிச் செயல்கள் செய்தமை குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல பாதாள உலக உறுப்பினரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் இம்ரானை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.
வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவரை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொலைகள் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் 4 நீதிமன்றங்களில் சந்தேகநபருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
டுபாயில் இடம்பெற்ற பாதாள உலக உறுப்பினர் மாகந்துரே மதுஷின் மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.