2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு இன்றைய தினம் (08) நாடாளுமன்றில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வேலுகுமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.