பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் ஷாஃப்டர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாஃப்டர் இன்று (15) அதிகாலை பொரளை பொது மயானத்தில் காரில் கட்டப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.
ஷாஃப்டர் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போனதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது மனைவி சிறிது நேரத்தில் அவரை அழைத்ததாகவும், அவரது தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர் பொரளை மயானத்தில் தங்கியிருப்பதாக அவரது மனைவியின் கைத்தொலைபேசிக்கு சமிக்ஞை கிடைத்துள்ளது.
காயங்களுடன் ஓட்டுநர் இருக்கையில் கட்டப்பட்ட நிலையில், அவரது அதிகாரி ஊழியர் ஒருவரால் அவர் மயானத்தில் கண்டெடுக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)