கண்டி - பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த வைத்தியரான பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடுகண்ணாவையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (04) அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
54 வயதுடைய குறித்த வைத்தியர் தமது தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர் பேராதனை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றிவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கடுகண்ணாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.