மெஸ்ஸி மீண்டும் அபார ஆட்டம் - நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மெஸ்ஸி மீண்டும் அபார ஆட்டம் - நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி, ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 35 மற்றும் 73-வது நிமிடங்களில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த இரு கோல்களுக்கும் நட்சத்திர வீரர் மெஸ்ஸியே காரணமாக இருந்தார். முதல் கோலுக்கு அபராமான அசிஸ்ட் செய்த மெஸ்ஸி, இரண்டாவது கோலை பெனால்டி வாய்ப்பில் அவரே அடித்தார்.

இதையடுத்து, நெதர்லாந்து வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினர். குறிப்பாக, 78-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியில் மாற்று வீரராக களம் கண்ட வெகோர்ஸ்ட், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இவர், 83 மற்றும் பிரதான நேரத்தில் கடைசி நிமிடத்தில் கோல்கள் அடித்து மிரட்டினார். 90 நிமிடங்கள் பிரதான நேர முடிவில், 2-2 என ஆட்டம் சமநிலையை எட்டியதால், வெற்றியை தீர்மானிக்க 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆனால், அதில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காததால், பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் அரண் போல் செயல்பட்டு, நெதர்லாந்து வீரர்களின் முதல் இரு முயற்சிகளை முறியடித்தார். விறுவிறுப்பின் உச்சம் தொட்ட இந்தப் போட்டியில் அர்ஜென்டினா பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-3 என்ற கோல்கணக்கில் த்ரில் வெற்றிபெற்றது. வழக்கம் போலவே இந்த போட்டியிலும் மெஸ்ஸியின் அபார ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.




2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்.!

இதற்கு முன்னதாக பிரேசில் - குரோஷியா போட்டியும் இதேபோல் இறுதிவரை விறுவிறுப்புடன் சென்றது. ஆட்டத்தின் 90 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தில் பிரேசில் அணியும் குரோஷியா அணியும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் 1-1 என்று சமனில் முடிந்தது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா 4-3 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.


முதல் இரு காலிறுதிப் போட்டிகளும் பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்றதால், கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தன. வருகின்ற 13ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று முதலில் நடைபெறும் காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டியில் பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.