எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
அதற்கமைய நாளை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, செத்தல் மிளகாய், தாய்லாந்து நெத்தலி மற்றும் உள்ளூர் டின் மீன் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.
புதிய விலைகள் பின்வருமாறு,
ஒரு கிலோ பெரிய வெங்காயம் - ரூ. 185 (ரூ. 5 குறைப்பு)
ஒரு கிலோ சிவப்பு பருப்பு - ரூ. 378 (ரூ. 7 குறைப்பு)
ஒரு கிலோ செத்தல் மிளகாய் - ரூ. 1,780 (ரூ. 15 குறைப்பு)
ஒரு கிலோ தாய்லாந்து நெத்தலி - ரூ. 1,100 (ரூ. 50 குறைப்பு)
உள்ளூர் டின் மீன்- ரூ 480 (ரூ. 10 குறைப்பு)