சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டை அடுத்த வருட நடுப்பகுதியில் நடத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் திரு எரிக் சொல்ஹெய்ம் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு ருவான் விஜயவர்தன ஆகியோரிடம் இது தொடர்பான சகல ஏற்பாடுகளையும் ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
திரு எரிக் சொல்ஹெய்ம் மற்றும் திரு ருவான் விஜயவர்தன ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஈடுபட்டுள்ள பல தலைவர்களை இலங்கைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திரு எரிக் சொல்ஹெய்முக்கு அறிவித்துள்ளார். மாநாட்டுக்கு வரும் பிரதான நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான திரு.பில்கேட்ஸை இலங்கைக்கு அழைத்து அவருடன் இணைந்து காலநிலை மாற்ற முகாமைத்துவத் திட்டத்தை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்ற சட்டத்தை அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)