ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதியின் மூன்றாவது போட்டியில் போர்ச்சுகல் அணியை எதிர்த்து மொராக்கோ அணி விளையாடியது. இந்த போட்டியில் மொராக்கோ வெற்றிபெற்றால், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா அணி என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு இருந்தது.
பெஞ்சில் (Bench) ரொனால்டோ
இதனிடையே கடந்த போட்டியை போலவே, நட்சத்திர வீரர் ரொனால்டோ தொடகக் லெவனில் களமிறக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய முதல் சில நிமிடங்களில் இரு அணி வீரர்களும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். பின்னர் மொராக்கோ அணியின் தடுப்பாட்டம் வலிமையடைந்த போது, மொராக்கோ வீரர்கள் அட்டாக்கிலும் பாய தொடங்கினர்.

மொராக்கோ முன்னிலை
மறுபக்கம் போர்ச்சுகல் அணி தரப்பில் ஒருங்கிணைந்த அட்டாக்கை செய்ய முடியாமல் திணறியது. இதனிடையே 42வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் என்-நெசரி ஹெட்டர் மூலம் முதல் கோல் அடித்து, அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். இதன்பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
போர்ச்சுகல் அட்டாக்
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியின் முதல் சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்பட்டார். இருந்தும் போர்ச்சுகல் அணியின் அட்டாக்கை மொராக்கோ அணி வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்தில் போர்ச்சுகல் அணி வீரர்கள் பாக்ஸிற்குள் பந்தை கொண்டு சென்றாலே, எளிதாக அதனை தடுத்து மொராக்கோ அணி அட்டாக் செய்ய தொடங்கியது.
கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ
போர்ச்சுகல் அணியின் தோல்வி காரணமாக நட்சத்திர வீரர் ரொனால்டோவின் உலகக்கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து களத்தில் இருந்து கண்ணீருடன் ரொனால்டோ வெளியேறினார். 37 வயதாகும் ரொனால்டோ அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், ஜாம்பவான் வீரர் ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு கானல் நீராக முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.