யாருய்யா அந்த குரோஷிய கோல்கீப்பர்.. முடிவுக்கு வந்த நெய்மர் கனவு..கண்ணீருடன் கதறிய பிரேசில் வீரர்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாருய்யா அந்த குரோஷிய கோல்கீப்பர்.. முடிவுக்கு வந்த நெய்மர் கனவு..கண்ணீருடன் கதறிய பிரேசில் வீரர்கள்

நாக் அவுட் சுற்றில் தென் கொரியா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தி இருந்தது. மறுபக்கம் ஜப்பான் அணியை பெனால்டி ஷூட் அவுட் மூலம் குரோஷியா அணி வீழ்த்தி இருந்தது. தடுப்பாட்டத்தில் கில்லாடியான குரோஷியா அணியை அட்டாக்கில் கில்லாடியான பிரேசில் அணி எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே பிரேசில் அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய, மறுமுனையில் குரோஷியா அணி ஒவ்வொரு முயற்சியையும் தடுத்து நிறுத்திக் கொண்டே இருந்தது.

குறிப்பாக 42வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில், கோல் அடிக்க தவறினார். தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் பிரேசில் அணியின் மாற்று வீரர்கள் களமிறக்கப்பட்டனர். குறிப்பாக ராபிங்கா வெளியேற்றப்பட்டு, ஆண்டனி களம் புகுந்தார். பின்னர் வழக்கம் போல் பிரேசில் அணி அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கியது.

குரோஷியா கோல்கீப்பர் அசத்தல்

இருப்பினும் பிரேசில் அணி எதிர்பார்த்த முதல் கோல் அடிக்க முடியவில்லை. அதற்கு குரோஷியா அணியின் கோல்கீப்பர் டாமினிக் லிவாகோவிச் முக்கிய காரணமாக இருந்தார். கிட்டத்தட்ட பிரேசில் அணி அட்டாக் செய்த போது 9 முறை கோல் வாய்ப்பை தடுத்து நிறுத்தினார். இரண்டாம் பாதி ஆட்ட நேர இறுதியிலும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

கோல் இல்லை

பிரேசில் அணி 90 நிமிடங்களாக அட்டாக் செய்ய, குரோஷியா அணியும் சலிக்காமல் 90 நிமிடங்களும் தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் முதல் பாதி ஆட்டத்திலும் பிரேசில் அணியே அட்டாக்கை தொடர்ந்து செய்தது.

நெய்மர் அதிரடி

இந்த நிலையில் கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் பிரேசில் அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து கூடுதல் நேரத்தின் இரண்டாம் பாதியில் குரோஷியா அணி கோல் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குரோஷியா பதிலடி

அதற்கேற்ப குரோஷியாவும் அட்டாக் மேல் அட்டாக் செய்ய, 116வது நிமிடத்தில் ப்ரூனோ பெட்கோவிச் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

குரோஷியா வெற்றி

தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் குரோஷியா கோல்கீப்பர் லுவாகோவிச் இரு வாய்ப்பை தடுக்க, இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் களத்திலேயே பிரேசில் ரசிகர்கள் கண்ணீர் சிந்தி சோகத்தை வெளிப்படுத்தினர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.