டயனா கமகே இலங்கை பிரஜையில்லை? குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டயனா கமகே இலங்கை பிரஜையில்லை? குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு!

dayana gamage

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கை பிரஜையில்லை என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் டயனா கமகே பிரிட்டிஸ் பிரஜை அவருக்கு இலங்கை கடவுச்சீட்டை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இந்த கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.


குறிப்பிட்ட கடிதத்தில் 2004 முதல் டயனா கமகே பிரிட்டிஸ் பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது இவர் என்ற இல பிரிட்டனின் கடவுச்சீட்டை வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் 2014 ஜனவரியில் டயனா கமகே என்ற இலக்கமுடைய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளார், 2018 நவம்பர் ஐந்தாம் திகதி இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் எனவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லாததால் அவருக்கு புதிய இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்க முடியாது என என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.


டயனா கமகேயின் விண்ணப்பங்களையும் அவர் இணைத்துள்ளார்.


இதேவேளை இந்த விடயம் விவாதிக்கப்பட்டவேளை நாடாளுமன்றத்தில் காணப்பட்ட ஜனாதிபதி டயனா கமகேயின் கடவுச்சீட்டு விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் உங்கள் கட்சி நாடாளுமன்றம் வருவதற்காக கட்சியை தந்தவர் அவர் அதனால் இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.