5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான ஊடக வெளியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான ஊடக வெளியீடு!


பாடசாலைகளுக்கு மாணவர்களைத்‌ தெரிவு செய்வதற்கும்‌ புலமைப்பரிசில்‌ வழங்குவதற்குமாக தரம்‌ 5 மாணவர்களுக்காக நடாத்தப்பரும்‌ பரீட்சை தொடர்பிலான நேர அட்டவணை வெளியானது.




மேற்படி பரீட்சை 18 டிசெம்பர்‌ மாதம்‌ 2022 ஆம்‌ நாள்‌ ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில்‌ 2,894 பரீட்சை நிலையங்களில்‌ நடைபெறும்‌.


இப்‌ பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும்‌ வரவு இடாப்பு உரிய பாடசாலை அதிபர்களுக்குத்‌ தபாலில்‌ தற்போது அனுப்பப்பட்டுள்ளன. இதுவரையில்‌ இவ்‌வரவு இடாப்பு ஆவணம்‌ கிடைக்கப்பெறாத பாடசாலைகளின்‌ அதிபர்கள்‌ அவ்‌ ஆவணத்தைப்‌ பெற்றுக்கொள்வதற்காக கீழே தரப்பட்டுள்ளவாறு செயற்பட வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்‌ பரீட்சைக்கு நிகழ்நிலை முறைமையின்‌ மூலம்‌ விண்ணப்பித்த பரீட்சார்த்திகளின்‌ விவரங்களடங்கிய அச்சுப்பிரதியுடன்‌, வேண்டுகோள் கடிதமொன்றையும்‌ இணைத்து இத்திணைக்களத்தின்‌ பாடசாலைப்‌ பரீட்சைகள்‌ ஒழுங்கமைப்பு, பெறுபேற்றுக்‌ கிளைக்கு உடனடியாக வருகைதந்து அவ்‌ ஆலணத்தைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.


தொடர்புகள்‌ :

தொலைபேசி இலக்கம்‌ - 011 - 2785922, 2784208, 2784537, 2786616

அவசர அழைப்பு இலக்கம்‌ - 1911

தொலைநகல்‌ இலக்கம்‌ - 011-2784422


தபால்‌ முகவரி - பரீட்சை ஆணையாளர்‌ நாயகம்‌,

பாடசாலைப்‌ பரீட்சைகள்‌ ஒழுங்கமைப்புக்‌ கிளை,

இலங்கை பரீட்சைத்‌ திணைக்களம்‌,

பெலவத்தை, பத்தரமுல்ல.


(யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.