கிழக்கு இளைஞர் அமைப்பின் 4 ஆவது ஆண்டு பூர்த்தியும் விருதுகள் வழங்கும் விழாவும் இன்று (07) புதன்கிழமை காலை 9.45க்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும்.
கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தானிஷ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டாக்டர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிழக்கு இளைஞர் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகரும் சர்வதேச மாற்றத்திற்கான பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகருமான றிஷாத் ஷெரீப், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நஸ்மியா சனூஸ், ஓய்வு பெற்ற அதிபரும், சமூக செயற்பாட்டாளரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஆலோசகருமான எம்.பி. அப்துல் ஹமீத், கல்முனை ஆர்டிஎச்எஸ் இன் மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்ஷான், நாவிதன்வெளி பிரதேசபை உறுப்பினர் எம்.பி. நவாஸ், சட்டத்தரணி எம்.ஏ. முஹம்மட் லாபீர் ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்வர்.
இந்நிகழ்வில் துறை சார்ந்த பலர் அவர்களது சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டவுள்ளனர்.
இவ் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுநாள் வரை இளைஞர், யுவதிகளின் நன்மை கருதி பல்வேறு வகையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஓர் அமைப்பு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு இளைஞர் அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.எம். முபாரக் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஏ.சாபீர், கிழக்கு இளைஞர் அமைப்பினது பிரதித் தலைவர் எஸ்.எம். சம்சித், உதவித் தலைவர் எம்.எஸ்.ஏ. ஹர்பான், தொண்டர் ஒருங்கிணைப்பாளர் ஏ.ரீ.எம்.பைசின், பொருளாளர் ஆர்.எம். தன்சீம், தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ. ஆர்.எப். சிரோனி, பிரதிச் செயலாளர் எம்.ஐ.எப்.சஜ்னா, உதவித் தலைவர் பி.நிலூ, பெண்கள் ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.எப்.றிஸ்னா, பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ். சலீம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் உட்பட கல்விமான்கள், புத்திஜீவிகள், அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொள்வர்.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்