கால்பந்து என்றாலே நிறைய சர்ச்சைகள் மற்றும் பரபரப்புகளுடன் தான் நடக்கும் என்பது வழக்கம். ஆனால் இந்த முறை வித்தியாசமாக உயிரிழப்புகளும் ஏற்படுவது சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
முதல் உயிரிழப்பு
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கிராண்ட் வாஹ்ல் என்பவர் கத்தாரில் உலகக்கோப்பை செய்திகளை சேகரித்து வந்தார். இவர் திடீரென கடந்த டிசம்பர் 10ம் தேதியன்று மைதானத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து போராடியும் காப்பாற்ற முடியவில்லை எனக்கூறினர்.
புகைப்பட நிபுணர்
இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது. கத்தார் நாட்டையே சேர்ந்த கலித் அல் மிஸ்லாம் என்ற புகைப்பட செய்தியாளர் போட்டி குறித்த புகைப்படங்களை சேகரித்து வந்தார். அப்போது அவரும் திடீரென மூச்சு விட சிரமப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரை விட்டார்.
3வது மரணம்
இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு பத்திரிகையாளர் மரணமடைந்துள்ளார். 65 வயதாகும் முன்னணி செய்தியாளரான ரோஜர் பேர்ஸ், தற்போது ஐ டிவியின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். கத்தார் உலகக்கோப்பையில் பணியாற்றி வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுவரை 8 உலகக்கோப்பைகளில் பணியாற்றியுள்ள அவர் இன்னும் 5 நாட்களில் ஓய்வு பெறவிருந்தார்.

நீடிக்கும் மர்மம்
இந்த 3 மரணங்களுக்கு பின் மர்மம் நிலவுவதாக ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதற்கு காரணம் எல்ஜிபிடி சமூகத்திற்கு ஆதரவு தெரிவித்தது தான் எனக்கூறப்படுகிறது. கத்தார் நாட்டில் ஓரிணச்சேர்க்கைக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால் முதலில் உயிரிழந்த கிராண்ட் வால்ஸ் சில நாட்களுக்கு முன்பு லீக் போட்டியில் ஓரிணச்சேர்க்கைக்கு ஆதரவாக ஆடை அணிந்து சென்றுள்ளார். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் நீண்ட நேரம் தடுத்து நிறுத்திவைத்துவிட்டு, அதன்பின்னர் அனுப்பிய சம்பவம் பெரும் பேசுப்பொருளானது. இந்த சம்பவம் தான் அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
என்ன ஆனது
இதுகுறித்து பேசியுள்ள கிராண்டின் சகோதரர், " கிராண்ட் ஓரிணச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்தவுடன் பல தரப்புகளில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறிவந்தார். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை சரியாக விசாரிக்க வேண்டும் எனக்கோரினார். இதே போல மற்ற 2 மரணங்களுக்கான தெளிவான காரணத்தையும் இன்னும் கத்தார் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. எனவே இதற்கு பின்னால் உள்ள மர்மம் என்பது என்ன என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
-வெளிநாட்டு ஊடகம்