கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பல்வேறு போதை பொருட்களுடன் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை யினை வழிபட வந்த 25 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.விஜிதாத அல்விஸ் அவர்களின் பணிப்புரையின் பேரில், ஹட்டன் ஹட்டன் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும், ஹட்டன் பிரிவுக்குட்பட்ட ஏனைய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும், பொலிஸ் உத்தியோகபூர்வ நாய் ஸ்டௌட் இன் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்தக் குழுவைக் கைது செய்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர், வழிபாட்டுக்கு வரும் வாகனங்கள் மற்றும் யாத்திரிகர்களை சோதனையிட்ட போது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களுடன் யாத்திரைக்கு வந்த 25 இளைஞர்கள் இரண்டு நாட்களில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ஹட்டன் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் கைது செய்யப்பட்ட இவர்கள், காலி, சிலாபம், மொனராகலை போன்ற பல்வேறு பிரதேசங்களில் இருந்து வழிபாடுக்கு வருகை தந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)