கொழும்பில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 வயதுடைய தனியார் வங்கியின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை 2022 டிசம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.ஏ. இளங்கசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு பெண் பிள்ளைகளின் ஒற்றைப் பெற்றோரான சந்தேக நபர், கிருலப்பனையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன், கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 14 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்பில் இருந்ததாகவும், பொது வாகன நிறுத்துமிடங்களில் கருப்பு டிண்ட் செய்யப்பட்ட ஜீப்பில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)