கொழும்பு மற்றும் பல புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (10) 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) இன்று தெரிவித்துள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் விநியோகிக்கும் குழாய்களில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை (10) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால், பின்வரும் பகுதிகள் பாதிக்கப்படும்:

- கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்.
- மஹரகம, பொரலஸ்கமுவ, மற்றும் கொலன்னாவ நகர சபை பிரதேசங்கள்
- கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள்
- இரத்மலானை மற்றும் கட்டுபெத்த
(யாழ் நியூஸ்)