டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று விகிதங்களை குறிப்பிட்ட வரம்புகளின் கீழ் கட்டுப்படுத்தி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் கையாள்வதாயின் அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ரூபாயின் மதிப்பு சுதந்திரமாக நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் டொலரின் மதிப்பு மீண்டும் உயரும் என்றும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)