MTV சேனல் பிரைவேட் லிமிடெட் ஊடக வலையமைப்பு இலங்கைக்கான FIFA உலகக்கிண்ண போட்டிகளின் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றுள்ளது.
TV-1 இல் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு போட்டியும் நேரலையில் ஷக்தி டிவி மற்றும் சிரச டிவியில் பகிரப்பட்டு ஒளிபரப்பாகும்.
இலங்கை தேசிய தொலைக்காட்சி, ரூபவாஹினி ஒத்துழைப்புடன் இணைந்து FIFA உலகக் கிண்ணத்தை ஒளிபரப்பப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் FIFA உலகக் கோப்பையை ஒளிபரப்பப் போவதாக சிரச தொலைக்காட்சி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)