இலாபம் ஈட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதால் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பலரும் கூறுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ், ஹில்டன் மற்றும் ஏனைய நிறுவனங்கள் டொலரில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இதன் மூலம் நாட்டின் பூஜ்ஜிய வெளிநாட்டு கையிருப்பு குறைந்தது 03 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஓய்வூதிய ஊழியர் சேமலாப நிதியம் 50% நலிவடைந்துள்ளதாகவும் இதன் மூலம் அதனை மேம்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தான் மக்களைப் பார்க்கிறேனே தவிர கட்டிடங்களை அல்ல என்றார்.
கொழும்பில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)