முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை வரவுள்ளார்.
அவர் நாடு திரும்புவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கட்சி மறுசீரமைப்பு உட்பட கட்சி தொடர்பான பல பணிகளில் ஈடுபடுவதற்காக முன்னாள் அமைச்சர் நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்தார்.
பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இலங்கையில் ஏற்பட்ட பொது அமைதியின்மைக்கு மத்தியில் பசில் ராஜபக்ச தனது அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அதன்பிறகு, அவர் செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார்.